Search Term:

Friday, 1 June 2012

ஆப்பிள் ஐ-கார்... ஸ்டீவ் ஜாப்ஸின் கனவுக்கு உயிர்கொடுத்த இத்தாலியர்!

மறைந்த ஆப்பிள் முன்னாள் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் சாதனங்களின் ஒருங்கிணைந்த வசதிகளுடன், மனதை மயக்கும் வடிவமைப்பு கொண்ட ஐ-காரை வடிவமைக்க விரும்பினார்.


அவரது கனவை மெய்ப்பட வைக்கும் முயற்சியாக, ஐ-மூவ் என்ற பெயரில் புதிய கான்செப்ட் காரை உருவாக்கி ஸ்டீவ் ஜாப்ஸ் கனவுக்கு உயிர் கொடுத்துள்ளார் இத்தாலிய வடிவமைப்பாளர் லிவியூ டூடோரன்.

சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத எலக்ட்ரிக் காரான இதில் ஆப்பிள் சாதனங்கள் மூலம் ஒருங்கிணைந்த வசதிகளை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கார் முழுவதும் ஒளி ஊடுருவும் வகையில் பெரும்பாலான பகுதிகளை கண்ணாடி ஆக்கிரமித்துள்ளது. 

மேலும், காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தகடுகள் மூலம் சூரிய சக்தி மின்சாரத்தை பெற முடியும். 3 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த காரில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு போதுமான இடவசதியும் உண்டு.

வாடிக்கையாளர் விருப்பத்திற்கு தக்கவாறு இந்த காரில் ஏராளமான வசதிகளை பெறுவதோடு, கஸ்டமைஸ் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் லிவியூ டூடோரன் தெரிவித்துள்ளார். 

ஸ்டீவ் ஜாப்ஸ் கனவை நனவாக்கும் வடிவமைப்பு கொண்ட கார்கள் வரும் 2020ம் ஆண்டு முதல் மார்க்கெட்டிற்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

-படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment