காரணங்கள்
பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக இவ் முக்கோண
வலயத்தில் ஏற்படுகின்ற விபத்துக்கள்,மர்மமான சம்பவங்களுக்கு பல காரணங்களும்
விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன.அவற்றின் நம்பகத்தன்மை என்பது இன்றளவும்
சந்தேகத்துக்குரியது.
கொலம்பஸ் தம் கடல் பயணத்தின் போது இவ்
வலயத்தில் பல வழமைக்கு மாறான நிகழ்வுகளும் சம்பவங்களும் இடம் பெற்றதாக
குறிப்பிட்டுள்ளார்.ஊகங்கள்,ஆய்வுகளின் முடிவுகள்,ஆய்வாளர்களின்
கருத்துக்கள் என்பவற்றினை அடிப்படையாக கொண்டு,இப் பகுதியில் நிகழும்
சம்பவங்களுக்கான காரணிகள் விஞ்ஞான பூர்வமாகவும்,அனுபவ
பூரவமாகவும்,அமானுஷ்யங்களுடன் தொடர்புபடுத்தியும் முன்
வைக்கப்படுகின்றன.அத்தகைய காரணிகள் சிலவற்றை பார்ப்போம்.
நாட்டுப்புற கதைகளில் கூறப்படும் காரணங்கள்
1000 ஆண்டுகளுக்கு முன்பு
போனீசிய,கார்தகீனியர் ஆகியோர் சார்கோ கடலைக் கடந்து செல்ல முடிந்த
காலத்திலேயே அந்தக் கடலைப் பற்றியும்,பெர்முடா முக்கோணம் பற்றிய கதைகளும்
தொடங்கிவிட்டன.
பழங் கதைகளின் படி அப் பிரதேசத்தில்
வாழ்ந்த ஆதி வாசிகள் சிறந்த ஆற்றல் வாய்ந்தவர்களாக காணப்பட்டனர்.அவர்களது
இயந்திரங்கள் கடலில் மறைந்துள்ளன.அவற்றின் சக்திகளால் அவர்கள்
கப்பல்களையும் விமானங்களையும் கடலுக்கடியில் கொண்டுசெல்கின்றனர்
என்கின்றனர்.இது வெறும் கற்பனையே.
இதனை ஒத்த கருத்து ஒன்றினை ஆய்வாளர்
"Edgarcaye " கூறுகின்றார்.இன்னும் சிலர் கடலில் வாழ்கின்ற கொடிய
விலங்குகளின் செயல் தான் இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என்று
கூறுகின்றனர்.
மேலும் வானிலிருந்து பூமியை நோக்கியை
விழும் நெருப்பு கோளங்கள் வெடிப்பதால் கப்பல்கள் தாக்கப்படுகின்றது
என்றும்,பெரிய கயிறு ஒன்றின் மூலமாக் கப்பல்கள் விமானகள் ஆகியவை வேறு ஒரு
கடல் பரப்பிற்கு கொண்டுசெல்லப்படுகின்றது என இன்னொரு காரணமும்
நாட்டுப்புறங்களில் கூறப்படுகிறது.
வேற்றுலகவாசிகளின் செயல்
பல ஆய்வாளர்கள் இத்தகைய விபத்துகள்
சம்பவங்கள் வேற்றுக்கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம் என்கின்றனர்.அதாவது
எம்மைவிட அறிவியலில் சிறந்த உயிரினங்கள் மனிதனை அறிவியலையும் அதனால் தனக்கு
ஏற்படும் பாதிப்புக்களையும் அறிந்து கொள்ள இத்தகைய செயல்களை மேட்கொள்ளலாம்
என்கின்றனர்.
ஐவான் சாண்டர்சன்,மேன்சன் வாலண்டின் போன்றோரின் கருத்தானது "அறிவில் சிறந்த உயிரினங்களின் செயலாக இது இருக்கலாம்" என்கின்றனர்.
பெர்முடா முக்கோணத்தை பற்றிய ஆய்வை
மேற்கொள்ளும் அனைவரும் UFO (Unidentifiend Flying Object ) "அடையாளம்
தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்."இது பற்றி
ஆய்வாளர்கள் பலர் இக் காரணங்களை தவறானது என்று முன் வைக்கின்றனர்.
தெற்கு புளோரிடா தொடக்கம் பஹாமா தீவுகள்
உள்ள பகுதிகள் வரை UFO க்களின் நடமாட்டம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வலயம் பெர்முடா முக்கோணத்தில் விமானங்கள்,கப்பல்கள் காணாமல் போகும்
பிரதான இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீரோட்டங்களின் செல்வாக்கு
கடலின் ஆழத்தில் ஓடுகின்ற வெப்ப,குளிர்
நீரோட்டங்களின் செல்வாக்கின் காரணமாக இத்தகைய நிகவுகள் இடம்பெறலாம் என
கூறப்படுகின்றது. அதாவது உலகின் கிழக்கு கண்டப் பகுதிகளின் கடற்பரப்பில்
வெப்ப நீரோட்டங்கள் தென்திசையிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கின்றன.அதே
போல் குளிர் நீரோட்டங்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி
பயணிக்கின்றன.இவ்விருவகை நீரோட்டங்களும் எதிர் எதிர் திசையில் சந்திக்கும்
போது வெப்ப நிலை மாறல்,ஆழம் அதிகரிப்பு அமுக்க வேறுபாடுகள் என்பன
ஏற்படுகின்றன.இத்தகைய ஒரு நிலையில் திசைகள் மாறுபாடும் ஏற்படுகின்றது.இவ்
விளைவுகளின் காரணமாக காந்தபுலம் ஏற்படும்.இதனால் செய்தித் தொடர்பு
பாதிக்கப்பட்டு அங்கு காந்த விசை பரவி அந்த பகுதியில் செல்லும்
விமானங்களும் கப்பல்களும் பாதிப்படைகின்றன.
மீதேன் ஹைட்ரேட்டுக்களின்(Methane Hydrates ) தாக்கம்
ஆஸ்திரி கடல் ஆய்வுகளின் படி மீதேன்
ஹைட்ரேட்டுக்கள் நீரின் அடர்த்தியை குறைப்பதினால் அவற்றினால் கப்பல்களை
மூழ்கச் செய்ய முடியும் என்கின்றனர். கடலில் திடீரென ஏற்படும் திடீர்
மீதேன் வெடிப்பு கப்பல் மிதக்கத் தேவையான மிதவைத் தன்மைகளை வழங்க
முடியாது.ஆனால் அமெரிக்காவில் நிலவியல் துறை ஆய்வியல் படி முக்கோணப்
பகுதியில் 15000 வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுக்களின் வெளிடுகள் எதுவும்
காணப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றனர். இதனால் இக் கருத்தும் ஏற்புடையது
அல்ல.
கடலில் ஏற்படும் திடீர் காலநிலை மாற்றங்கள்
சிலர் கடலில் ஏற்படுகின்ற திடீர் வெப்ப
அதிகரிப்பு,அமுக்கம் ,உயர அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக இவ் விபத்துக்கள்
ஏற்படலாம் என்கின்றனர். ஆனால் வானிலை நிலைமைகள் சாதகமாக இருந்த போதும் கூட
சில கப்பல்கள், விமானங்கள் காணாமல் போயுள்ளன.
கடற் கொள்ளை
பெர்முடா முக்கோணம் பற்றிய ஆரம்ப
காலங்களில் முன்வைக்கப் பட்ட கருத்தே கடற் கொள்ளையர்களின் செயலாக
இருக்கலாம் என்கின்றனர்.குறிப்பாக கரிபியன் கடற்பரப்பில் கடற்
கொள்ளையர்களின் செயற்பாடு அதிகமாக காணப்பட்டது.1560 - 1760 வரை அது மிகவும்
உச்ச நிலையில் காணப்பட்டது.எனினும் கப்பல்கள் கொள்ளை அடிக்கப்பட்டாலும்
அவற்றின் எச்சங்களாவது கிடைக்கக்கூடியதாக இருக்கும்.ஆனால் அவ்வாறான எத்தகைய
தடையங்களும் இதுவரை கிடைத்த ஆய்வுகளில் வெளிவரவில்லை.
நாளுக்கு நாள் இதுபற்றிய மர்மங்கள்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.மனிதனை அறிவியல் ஆற்றல் பல வேனக்களுக்கு
முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.ஆனால் இந்த இடத்தில் தெளிவான முடிவுகள்
இன்னும் முன் வைக்கப்படவில்லை.விண்வெளி,கப்பல் பயணிகளுக்கு சவாலாக அமையும்
இம் முக்கோண வலயத்தினை இன்னொரு மாறுபட்ட கண்ணோட்டத்திலும் பார்க்கலாம்.நவீன
அரசியலில் பூகோள அரசியல் என்பது பிரதான இடத்தை வகித்து வருகின்றது.இத்தகைய
ஒரு நிலையில் நாடுகளின் ஆட்புல எல்லைகள் என்பது அதன்
பாதுகாப்பு,ஸ்திரத்தன்மையில் அச்சாணியாக உள்ளது.
உலக வல்லரசாக விளங்கும் ஐக்கிய
அமெரிக்காவுக்கு அதன் பூகோள அரசியல் என்பது அதன் நிலவுகைக்கும் அதிகார
பரவலுக்கும் அவசியமானதொன்று .அதனை தக்க வைத்துக்கொள்ள தனது எல்லைப்பரப்பில்
அமைந்துள்ள இக் கடற் பரப்புகள் அமெரிக்க அரசும்,கடற் படையும்,இராணுவமும்
இத்தகைய கபட நாடகங்களை நடத்தினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


No comments:
Post a Comment